சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் : 5 பேர் பலி -11 பேர் படுகாயம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசாங்க விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு அரசாங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த மாளிகைக்குள் திடீரென ஒரு வாகனம் அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளது. வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட அந்த வாகனத்தில் இருந்தவர் உள்ளே நுழைந்ததும் தன்னைத்தானே வெடிக்க செய்துள்ளனர்.
இதில் அந்த வாகனத்தில் இருந்தவர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த தற்கொலை படை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கருத்துரையிடுக