பங்களாதேஷ் ஒட்சிசன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ஒட்சிசன் ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட தீப்பரவலில் இதுவரையில் 6 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

 தென்கிழக்கு துறைமுக நகரமான சிட்டகொங்கில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சீதகுண்டா பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் என்னவென்று தகவல்கள் வெளியாகவில்லை என தீயணைப்பு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

 குறித்த ஆலையை சுற்றியுள்ள 2 கிலோமீற்றர் பரப்பளவில் இதன் தாக்கம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.