ஈக்வடோரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் உயிரிழப்பு அதிகரிப்பு.

ஈக்வடோரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் உயிரிழப்பு அதிகரிப்பு.

ஈக்வடாரின் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

 மேலும் 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (18.03.2023) இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
இதன் காரணமாக பல நகரங்களில் பல வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், பலர் அந்த கட்டிடங்களுக்கு இடையில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாண்டா ரோசா விமான நிலையமும் நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது

கருத்துகள்