இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

TestingRikas
By -
0
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,"விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.இப்போது போக்குவரத்து கட்டணத்தை குறைக்கலாம்.

ஏனென்றால் மாற்று விகிதம் நிலையானதாக இருந்தால்,டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் அளவு குறைக்கப்பட்டால், நமது எரிபொருள் செலவு குறையும்.

இதனடிப்படையில் ஏனைய செலவுகளை குறைப்பதன் பலனையும் மக்களுக்கு கொடுக்கலாம். எனவே எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம்”என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)