தேர்தலுக்கான நிதி தொடர்பில் பதில் கிடைக்கவில்லை
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதகமான பதில் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
இதனிடையே, இவ்வாரத்திற்குள் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக