ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தகவல்!

கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறையில் உள்ளதால் எதிர்வரும் 24 ம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதே வேளை அதிபர்களின் வேண்டுதலுக்கு அமைய எந்தவொரு ஆசிரியரையும் 10 வருடம் நிறைவு செய்யப்பட்டவர்களை கடமையில் வைத்திருக்க முடியாது எனவும் அனைத்து மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் திடீர் ஆய்வுகள் இது விடயமாக மேற்கொள்ளப்படுமெனவும் அவ்வாறு நடந்து கொண்ட அதிபர் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஆசிரியர் நியமனம் தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள் மார்ச் 24 ஆம் திகதி வரை மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுக்கு முறையான கடித ஆவணம் மூலம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.