விளையாட்டின் விளைவால் அரச - தனியார் பேருந்து நுவரெலியாவில் விபத்து

கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இரு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அரச பேருந்துடன் தனியார் பேருந்து மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது

கண்டி - நுவரெலியா  பிரதான வீதியில் நுவரெலியா வெஸ்வாடோ டொப்பாஸ் பகுதியில்  இன்று (03) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி போட்டி போட்டு  பயணித்த தனியார் பேருந்தும் , இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும்  நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்துக்கு வழிவிடும் போது தனியார் பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் அரச பேருந்துடன் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த  பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.