கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் அமைப்பான சியன ஊடக வட்டத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும்  புதிய நிர்வாகத்தினர் தெரிவு  பெப்ரவரி மாதம் 25ம் திகதி கஹட்டோவிட்ட அல் பத்ரியா  மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 சியன ஊடக வட்டத்தின் நடப்புத் தலைவர் அல்ஹாஜ் எம்.இசட். அஹமட் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அலல் பத்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மிர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

இப்பொதுக் கூட்டத்தின் விசேட அம்சமாக புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு இடம்பெற்றது. இதன் போது  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இசட், அஹமட் முனவ்வர்  இவ்வருடத்திற்கான தலைவராக மீண்டும் சபையினரால் ஏகமனதாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து உப தலைவராக  மீள்பார்வை பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், தற்போது நியுஸ் நவ் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிகின்ற ஊடகவியலாளர் பியாஸ் மொஹமட் அவர்களும், செயலாளராக அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் அதிகாரியாக பணிபுரியும் எஸ்.ஏ.எம். பவாஸ் அவர்களும், உப செயலாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின்செய்தி ஆசிரியராக பணிபுரியும் பஸ்ஹான் நவாஸ் அவர்களும், பொருளாளராக நவமணி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரான ஸிராஜ் எம். ஸாஜஹான் அவர்களும், உப  பொருளாளராக சமூகவியல் பட்டதாரி மாணவர் அதீக் ரிபாய்  அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


 ஏனைய அங்கத்தவர்கள் விபரம்

• தயாரிப்பாளர் - அஷ்.  ராஷித் நூமான்

• இணை அமைப்பாளர்கள்

1. ஆசிரியர் எம்.ட்டீ. இக்பால் நாஸர்

2. சகோதரர். ஸாலிஹ் பிர்தௌஸ்

• கம்பஹா மாவட்ட பாடசாலை ஊடகக் கழக  ஒருங்கிணைப்பாளர்கள்

1. அஷ். எம்.ஆர். ஹிஸாம் மொஹமட் (ஆசிரியர்)

2. அஷ். எம்.எம். மொஹிடீன் (ஆசிரியர்) 

கவிஞரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சகோதரி பயாஸா பாஸில் சியன ஊடக வட்ட பெண்கள் பிரிவு பொறுப்பாளராகவும் சியன நியூஸ் இணையத்தள ஆசிரியருமாக நியமிக்கப்பட்டார். 

கமிட்டியின் அங்கத்தவர்களாக
சகோதரர். எம்.என். நிஜாமுதீன், 
சகோதரர். எம்.ஏ. மாயிஸ் அவர்களும் 
போசகர்களாக பஹன மீடியாவின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான 
அஷ. எம்.எஸ்.ஏ. முஜீப் ( கபூரி ) மற்றும் குவைத் தூதரக சிரேஷ்ட அதிகாரி அஷ் எம். 
 பிர்தௌஸி (நளீமி) அவர்களும் நியமிக்கப்பட்டனர். 

கிளை ஒருங்கிணைப்பாளர்களாக 
 ஊடகவியலாளர் ஸஹ்பியா நஸார் (திஹாரிய) 
ஊடகவியலாளர்  பௌசுல் அலீம் (மினுவாங்கொட) ஆகியோரும்
 நியமிக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.