ஏப்ரல் முதல் அரை சொகுசு பஸ்கள் இரத்து

 நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியிலிருந்து அரை சொகுசு பஸ்கள் இரத்துச் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, இந்த பஸ்களுக்கும் சாதாரண பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லாததை அவதானிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.