மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

உலகின் முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.

அவரது மனைவி Antonella Roccuzzo குடும்பத்திற்கு சொந்தமான ரொசாரியோவில் (Rosario) உள்ள பல்பொருள் அங்காடி தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஒரு குறிப்பை விட்டுச் சென்றனர், அதில் “மெஸ்ஸி நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம், ரொசாரியோவின் மேயர் ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவரால் உங்களைப் பாதுகாக்க முடியாது.” என எழுதப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சூப்பர் மார்க்கெட் சேதமடைந்துள்ளது.


அங்கு சந்தேகநபர்களால் 14 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.