பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அதிரடி அறிவிப்பு!

இன்று பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணியை சீர்குலைக்கும் அல்லது அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி செயல்படும் தொழிற்சங்க ஆர்வலர்கள் அல்லது ஊழியர்களுக்கு எதிராக பணிநீக்கம் மற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவருக்கு நேற்று பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.