தேநீர் விலையை குறைக்க தீர்மானம்

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.