புகையிரத கழிவறையில் குழந்தை- தாய், தந்தைக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

“மீனகயா” புகையிரதத்தின் கழிவறையில் கைவிட்டுச் சென்ற குழந்தையின் தந்தை மற்றும் தாய் மார்ச் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த “மீனகயா” புகையிரதத்தின் கழிவறையில் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் எனவும், தந்தை கொஸ்லந்த பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, குழந்தையின் தாயும் தந்தையும் விவாகம் செய்யவில்லை என்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.