இலங்கை - தாய்லாந்து வர்த்தக சபையின் செயற்குழு 
உறுப்பினராக தொழிலதிபர் சம்மாந்துறை சாலிஹீன் தெரிவு!

இலங்கை - தாய்லாந்து வர்த்தக சபையின் 21வது வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பு மெல்பேர்ன் அவென்யூவில் உள்ள சியம் ஹவுஸில் நடைபெற்றது. 
இதில் இலங்கை - தாய்லாந்து வர்த்தக சபையின் 2023/2024 ஆம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதனடிப்படையில் குறித்த குழு நிழற்பிரதியில்:  
முதல் வரிசையில் இடமிருந்து: பொருளாளர் அசிம் முக்தர், உப தலைவர் கமில் வீரசேகர, நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் ரிசான் நசீர், தற்போதைய தலைவர் துஷ்யந்த பஸ்நாயக்க, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹரன்போல், நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் லயனல் பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி லலித் குமாரகே, உப தலைவர் ஏ.எம். முசாஜி, மற்றும் செயலாளர் பிரியந்த கொலன்னகே.

இரண்டாவது வரிசையில் இடமிருந்து நிற்பவர்கள்: உதவிப் பொருளாளர் யசோதா பீரிஸ், குழு உறுப்பினர் அப்துல் சாலிஹீன், குழு உறுப்பினர் வேணுர பெர்னாண்டோ, அமைச்சர் ஆலோசகர் ஆர்த்தித் பிரசார்ட்குல், குழு உறுப்பினர் றியன்சி பெர்னாண்டோ, குழு உறுப்பினர் சந்தன நாணயக்கார, குழு உறுப்பினர் ரொஹான் எல்கிரியவிதான, முதன்மைச் செயலாளர் பீரபத் தோங்ரோட்.

வருடாந்த கூட்டத்தொடரைத்  தொடர்ந்து, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் Poj Harnpol ஐ சந்தித்த குழுவினர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துவது மற்றும் இலங்கைக்கும் - தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இருப்பதன் நன்மைகள் குறித்து வெற்றிகரமான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.

மேலும், சம்மாந்துறையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.எம்.ஏ. சாலிஹீன் இலங்கை - தாய்லாந்து வர்த்தக சபையின் இவ்வாண்டுக்கான செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு 'நியூஸ்ப்ளஸ்' ஊடகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. 

இவர், 'நியூஸ்ப்ளஸ்' ஊடகத்தின் முகாமைத்துவ பிரிவின் பிரதம ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.