தபால் மூல வாக்களிப்பு மீண்டும் தாமதமடையலாம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது வரை அரச அச்சகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறவில்லை.

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை தபால் வாக்குச்சீட்டுகளை தொடர்புடைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்கும் பொருட்டு, தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.