சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்களால் பதவியுயர்வு பெற்ற தலைவர் றியாத் ஏ.மஜீத் கெளரவிப்பு!

சாய்ந்தமருது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளரும், சிலோன் மீடியா போரத்தின் தலைவருமான கலாநிதி றியாத் ஏ மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக அண்மையில் பதவியுயர்வு பெற்றமையை சிலோன் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்தும் நிகழ்வு தலைவரின் இல்லத்தில் (13) இரவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பொது செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பிரதித் தலைவர் எஸ். அஸ்ரப்கான், பிரதி செயலாளர் எம்.எம். ஜபீர், நிறைவேற்று குழு உறுப்பினர்களான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.வை. அமீர், எம்.பி.எம். றின்ஸான், என்.எம். சிராஜுதின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீத் ஊடகத்துறைக்கும், தனது தொழில் சார்ந்தும் செய்த சமூகப் பணிகளை பாராட்டி உரை நிகழ்த்தியதுடன் பொன்னாடை போத்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.