இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியம் பிணை எடுப்புப் பொதி தொடர்பில் இன்று தீர்மானம் !
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய சபையின் நிறைவேற்று சபை திங்கட்கிழமை (20) கூடவுள்ளது.
மார்ச் 7 ஆம் திகதி IMF நிறைவேற்றுப் பணிப்பாளர் Kristalina Georgieva, இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கை எடுப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிமொழிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டிற்கான $2.9 பில்லியன் பிணை எடுப்புப் பொதியின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான ஒப்புதலைப் பரிசீலிப்பதற்காக IMF வாரியம் மார்ச் 20 ஆன இன்று கூட்டம் நடைபெறும்.
கருத்துரையிடுக