சாக்லேட் சாப்பிட வேண்டாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகளின் காலாவதி திகதி, உற்பத்தி திகதி போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடாமல் இலங்கை முழுவதும் உள்ள சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக மனித பாவனைக்கு பொருத்தமற்ற சாக்லேட் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சாக்லைட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.