அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதுவராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகள், ராஜதந்திரிகள் எனப் பெருந்தொகையானோர் இதில் கலந்து கொண்டனர்.

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதுவர் காலித் ஹமூத் அல் கத்தானி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன் முறையாக இலங்கையிலுள்ள ஈரானியத் தூதுவர் கலந்து கொண்டிருந்தார்.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் மலரத் தொடங்கியதை அடுத்து சவூதி அரேபிய, ஈரான் நிகழ்வுகளில் இருநாடுகளின் ராஜ தந்திரிகளும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.