தேவஹூவவில் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து, கலை இலக்கிய கல்விப்பணி புரிந்தவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை காட்டிய மாணவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட முப்பெரும் விழா, 12/03/2023 ஞாயிற்றுகிழமை, ம/மா/க/ தேவஹூவ முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில், அதிபர் எம்.ஐ. இம்தியாஸ் மொஹமத் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட மூத்த ஊடகவியலாளர் "கலாபூஷணம்" எம்.ஏ.எம். நிலாம் (ஈழத்து நூன்), தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம் நபீஸ் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்துவதையும், அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளர் ரஷீத் எம். றியாழ், சம்மேளனத் தலைவர் எம். நிஜாமுதீன், பொதுச்செயலாளர் மௌலவி ஐ.ஏ. காதிர் கான் மற்றும் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியத்துறை, சமூக சேவைப்பணிகளில் ஈடுபாடுள்ளவர்கள் உள்ளிட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
இவ்விழாவில், பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள் போன்ற போட்டி நிகழ்வுகளில், தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகள், விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், பிரதேச ஊடகவியலாளர்கள், நாட்டுக்காக சமூகப்பணி புரிந்தோர்கள் பலரும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக