⏩ கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குதல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது…

⏩ நீர் திட்டத்தினால் 440 கிராம சேவை பிரிவுகளுக்கு நீர்...

⏩நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ஒக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படும்...
                                                 - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் திட்டத்தின் புதிய நீர் இணைப்புகளை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் உள்ள 440 கிராமசேவை பிரிவுகளில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூ றினார்.

இதன்படி, பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் அத்தனகல்ல மற்றும் பஸ்ஸயால பகுதிகளுக்கு புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், நிட்டம்புவ, மினுவாங்கொடை மற்றும் கம்பஹாவைச் சுற்றியுள்ள பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.

கம்பஹா, கரஸ்நாகல, பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது. 

புதிய நீர் இணைப்புகளை வழங்குவதில் மக்களுக்கு வசதியாக 12 தவணைகளில் பணத்தை செலுத்தும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.      

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதன் செயற்பாடுகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2021 இல் பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக, கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இங்கு கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதற்கமைய, பஸ்னாகொட நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அத்தனகல்ல, மீரிகம, மினுவாங்கொடை, மஹர மற்றும் தொம்பே உள்ளிட்ட பல பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த நீர் வழங்கல் அமைப்பின் கீழ் கம்பஹா, அத்தனகல்ல - மினுவாங்கொட கூட்டு நீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் தேசிய நீர் வழங்கல் சபை என்பன இணைந்து இந்த  நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த கலந்துரையாடலில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ, தேசிய நீர் வழங்கல் சபையின் உப தலைவர் சஞ்சீவ விஜேகோன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.