பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் கங்காரமய உலர் உணவு பகிர்ந்தளிப்பு

TestingRikas
By -
0
பாக்கிஸ்தான் உயர்ஸ்தாணிகர் கங்காரமய உலர் உணவு பகிர்ந்தளிப்பு


பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி அவர்கள்
கொழும்பு கங்காராமய விகாரையின் வணக்கத்திற்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரை
சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் உள்ள பௌத்த
பாரம்பரியம் மற்றும் அப்பகுதிகளுக்கு புனித யாத்திரை செல்வதை ஊக்குவிக்கும் வாய்ப்புக்கள்
குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், இலங்கை பௌத்த மத சுற்றுலாப் பயணிகள்
பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக, உயர்ஸ்தானிகர் தலைமையில் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உலர்
உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. உலர் உணவுப்பொதிகள் விநியோகத்தின் மூலம்
எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் முயற்சிகளை
வணக்கத்திற்குரிய தேரர் பாராட்டினார்.


(அஷ்ரப் ஏ சமத்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)