அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு ஆபத்து

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து துறையின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 070 350 0525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அறிவிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக தனியார் பஸ்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், அரச வாகனங்கள் மற்றும் பொலிஸ் வாகனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதத்தின் இறுதி வாரத்தில் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் தனியார் பஸ்களுக்கு புகை பரிசோதனை செய்யப்படுவதாகவும், கடந்த மாத சோதனையில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பஸ்கள் புகை பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.