பொதுச் சொத்தை சூறையாடாதே..- புத்தளம் கபூரிய்யா பழைய மாணவர்கள் கிளையினால் போராட்டம்

  Fayasa Fasil
By -
0

மஹரகம கபூரிய்யாவின் வக்பு செய்யப்பட்ட பொதுச்சொத்து அபகரிப்புக்கு எதிராக இன்று முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டது.

குறித்த போராட்டத்தை புத்தளம் கபூரிய்யா பழைய மாணவர்கள் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கமைய இன்று (31) ஜும்ஆ தொழுகையின் பின்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கபூரியா பொதுச்சொத்தை சூறையாடதே, வக்பு ஒரு பொதுச்சொத்து மறுமையின் நெருப்பை உண்ணப்போகிறாயா, பொதுச்சொத்தை காப்பாற்ற ஒன்றுபடுவோம் உள்ளிட்ட வசனங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)