பல்கலைகழக ஆசிரியர்கள் போராட்டம் இன்றும் தொடர்கிறது

பல்கலைகழக ஆசிரியர்கள் போராட்டம் இன்றும் தொடர்கிறது

பல்கலைக்கழக ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்தார்.

அதனுடன் இன்று முற்பகல் 11 மணி முதல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராகவும், ருஹுணு பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள்