ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. 

இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மேலும் தெரிவிக்கையில் ,

 ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பெப்ரவரி 28-ம் திகதி ஏற்பட்டுள்ளது, 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

 இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

முன்னதாக ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்