பொதி செய்யப்பட அரிசி குறித்து சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது!

பதுளை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட தேடுதலில், பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. உள்ளுர் அரிசிப் பொதிகளில் இந்நிலைமை காணப்பட்ட போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என பதுளை மாவட்ட உதவி அளவீட்டு அலகு சேவை அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து சுமார் 2 மில்லியன் இறக்குமதியாகும் முட்டைகளை துறைமுகத்தில் அடைத்து வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த முட்டை கையிருப்பை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.