நாடு நாடுகளாக தாக்கும் நில நடுக்கம் .

சற்று முன் எதிர்பாராத விதத்தில் நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துருக்கி, சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் கடந்த மாதம் 6 ம் திகதி துருக்கியின் காசியான்டெப் நகரில் தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. 

இந்தியாவிலும் மலைப்பகுதியையொட்டி மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் உள்ளன. இந்நிலையில் இன்று கெர்மடெக் தீவு பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் 6.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 152 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.