போயா தினங்களில் மதுபானம் விற்க அனுமதிக்க வேண்டும்-அமைச்சர் டயானா கமகே கோரிக்கை!

சுற்றுலா மையங்களில் போயா தினங்களில் மதுபானத்தை விற்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

உல்லாசப் பிரயாணிகளுக்கு போயா தினங்களில் மதுபானம் அருந்துவதற்கு வசதியின்மை குறித்து சுட்டிக்காட்டினார்.இந்த நிலையை மாற்றுவதற்காக போயா தினங்களில் மதுபானம் விற்பதற்கு சுற்றுலா மையங்களுக்கு அனுமதி  வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு சாதகமான பதிலை அளிக்கவில்லை.இதற்கு அனுமதியளித்தால் இன்னொரு பிரச்சினையை நாம் உருவாக்கிக் கொள்வோம் என்று அவர் பதிலளித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.