வறிய குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நுவரெலியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வறிய குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்
நுவரெலியா சாந்திபுரம் மற்றும் கலாபுரம் கிராமத்தில்   ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர்
நந்தன கலபட ஆரம்பித்து வைத்தார்.

நுவரெலியா சாந்திபுரம் மற்றும் கலாபுரம் கிராமத்தில் வாழும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு
அம்பாறை மாவட்ட விவசாயிகளிட மிருந்து அரசாங்கத்தால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் பெறப்பட்ட அரிசில் பத்து கிலோ வீதம்
நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட நேற்று முன் தினம் வழங்கினார்.

 இந்தத் திட்டம் 2022/2023 உயர் பருவ அரிசி கொள்முதல் மற்றும் அரிசி இருப்பு அகற்றல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது, இதில் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது.

 இதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 05 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு சுமார் ஒரு இலட்சத்து பதினான்காயிரம் குடும்பங்களுக்கு 2289 மெற்றிக் தொன் அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.