தேவை ஏற்பட்டால் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்.
கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுமாயின், பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டுக்காக சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள் மற்றும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு அரச அச்சு கூட்டுத்தாபனத்தினாலும் உள்நாட்டு விநியோத்தர்களினாலும் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வு இன்று கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
கருத்துரையிடுக