மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் MHM. நசீர்  கெளரவிப்பு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் MHM. நசீர் கடந்த வாரம் ஓய்வு பெற்றுச் சென்றதை அடுத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் நடைபெற்றது.
 கோறளைப்பற்று மேற்கு கோட்ட உடற்கல்வி ஆசியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களினால் தியாவட்டவான் அரபா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியர் ACM.FIRNAS தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் ALM. இஸ்மாயில், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் AM. Najeeb ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

MHM. நசீர்  ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டாலும் விளையாட்டுக்கான தனது சேவையை தனது ஊரோடு மாத்திரம் நின்று விடாமல் மாவட்டம், மாகாணம் என்று தனது சேவையினை விரிவு படுத்தி இயங்கிச் சென்ற ஒருவர், இவரது முயற்சியினால் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றவிப்பாளர்கள் பலர் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது. இவரது ஓய்வு அறிவிப்பானது எமது மட்டக்களப்பு மத்தி வலையத்திற்கு பாரியதொரு இழப்பாகும்.
17.03.2023 திகதி அன்று இரவு எட்டு மணியளவில்  இந்நிகழ்வு இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.