120 பாதை வழி இலக்க பேருந்துகள் வேலை நிறுத்தம் !

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் (RPTA) அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, கெஸ்பேவ - பெட்டா வழித்தடத்தில் (120 பாதை) இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (ஏப்ரல் 13) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதன்படி, புதிய பஸ்ஸிற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு RPTA அண்மையில் எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் 120 வழித்தடத்தில் கெஸ்பேவயில் இருந்து பெட்டாவிற்கு புதிய பஸ்களை இயக்க முடியாது என பஸ் நடத்துநர்கள் தெரிவித்தனர்.

கெஸ்பேவ பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள RPTA ஊழியர்களில் இருவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாதிட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.