கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் பால் குடித்த 13 சிறுவர்கள் ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.but

வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில், அச்சமடைந்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து குறித்த 13 சிறுவர்களும் இவ்வாறு வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும், பரிசோதனைக்காக பொரளையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.