15ஆம் திகதி சமுர்த்தி வங்கிகள் திறக்கப்படுமா!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதி சமுர்த்தி வங்கிகளைத் திறப்பதைத் தவிர்ப்பதற்கு சமுர்த்தி தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.

புத்தாண்டு காலத்தில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கான சுப காலமாக ஏப்ரல் 15ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்,
சமுர்த்தி ஊழியர்களின் ஊக்குவிப்பு பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகலுகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.