#கட்டாரில்_மிக_விமர்சையாக_
நடைபெற்ற_இத்தார்_நிகழ்வு

கட்டாரில் தொழில் செய்கின்ற கஹட்டோவிட,  ஒகடபொல மற்றும் உடுகொட பிரதேசங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த 14 கட்டாரில் மிக விமர்சையாக நடைபெற்றது.

தோஹா மும்தஸா பார்க்கில் நடைபெற்ற இவ்இப்தார் நிகழ்வில் சுமார் நூறு சகோதர சகோதரிகள் தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

கொரோனா காரணமாக கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் இருந்த பிரதேச சகோதரர்களின் ஒன்று கூடலானது எல்லார் மத்தியிலும் மிகுந்த சந்தோஷத்தையும் மகிழ்வையும் கொடுத்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை கட்டார் வாழ் அல்பத்ரியா பழைய மாணவர்களின் 2007 O/L வகுப்பு ஏற்பாடு செய்திருந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.