நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் 
****************************

மன்னார்  தொடக்கம் புத்தளம்,  கொழும்பு, காலி  ஊடாக மாத்தறை  வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களிலும்  மாலை  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்கிழக்குத்  திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி  காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.