நாட்டின் அனேகமான இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் - இன்றைய வானிலை (2023.04.28)



நாட்டின் அனேகமான இடங்களில்  பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் தென் மாகாண கரையோரப்பிராந்தியங்களிலும்  காலை வேளையிலும்  மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் 
****************************

நாட்டை சூழ உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்கிழக்குத் திசையில் இருந்து கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துகள்