உலகின் மிக அழகான 23 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்!

 2023 ஆம் ஆண்டில் உலகில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23 நாடுகளுக்குப் பெயரிட்டுள்ளது.

விருது பெற்ற பயண ஆவணப்படத் தயாரிப்பாளரான ஜூலியானா ப்ரோஸ்ட் இந்தப் பட்டியலில் இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிக பணவீக்கம் இருந்தாலும், இலங்கை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக இருக்கும் என ஜூலியானா குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம், கண்டி, யானைகள் சரணாலயம் மற்றும் யால தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலா தலங்களாகவும், இலங்கையில் குறுகிய தூரத்தில் சென்று பார்க்கக்கூடிய பல இடங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.