25 வயதின் கீழான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

அனைத்து ஏழு பேர் கொண்ட இச்சுற்றுப் போட்டி நிட்டம்புவ கம்புராகல்ல மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (1) திறந்த போட்டியாக நடைபெற்றது. உள்ளூர் கழகங்களான JF, Jinna, Badriyans ஆகிய அணிகளின் 25 வயதுக்கு கீழான வீரர்களைக் கொண்ட கஹட்டோவிட்ட அணியானது முதன் முறையில் களமிறங்கி சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 

அண்மை காலங்களில் கம்பஹா மாவட்டத்தில் கால்பந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் போட்டிகளில் கஹட்டோவிட்ட அணிகள் தமது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்று வருவதை காணலாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.