3 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

 பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேச செயலக பிரிவு, கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவு மற்றும்  இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு, கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.