ஊவா பல்கலைக்கழகத்துக்கும்,  பதுளை தர்மதுதா பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது கெப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கிரிக்கெட் போட்டியின் போது வாகன அணிவகுப்பு மைதானத்தை சுற்றிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.