பாரம்பரிய வைத்தியர்களுக்கான பயிற்சி செயலமர்வு!

கொழும்பு சுகாதார அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாரம்பரிய வைத்தியர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு இன்று தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. 

கொழும்பு சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன் தலைமையில் ஆரம்பமான இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், அமைச்சின் சுதேச வைத்தியப் பிரிவின் வைத்தியர் சி.சிவகுமார் உள்ளிட்ட வைத்தியர்களும், திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுதேச வைத்தியப் பிரிவின் தலைவர் பி.தயாநந்தன்,  கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மற்றும் வைத்தியர் சி.சிவகுமார் ஆகியோரினால் பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பாரம்பரிய வைத்தியர்களின் அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கிலும், அவர்களின் வைத்திய முறைகளை எவ்வாறு கடைப்பிடித்துச் செல்லல்வேண்டும் என்ற விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாரிவு செய்யப்பட்ட பாரம்பரிய வைத்தியர்களுக்கு மருந்துப் பொருட்களை கொண்டு செல்லக்கூடிய பைகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அபு அலா 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.