பிறையை கண்டால் அறிவிக்கவும்

 
ஹிஜ்ரி 1444 சவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது.

நாட்டின் எப்பிரதேசத்திலாவது சவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.