எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அடுத்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் முற்பதிவுகளை காசோலைகளுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், நிதிப்பிரிவின் குறித்த அதிகாரி எரிபொருள் முற்பதிவுகளை பணம் மூலம் மாத்திரம் மூலமே செய்ய முடியும் என அறிவித்ததை அடுத்து, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களால் முற்பதிவுகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பூரணை தினமான இன்று புதன்கிழமை (05) வங்கிகள்  மூடப்பட்டுள்ளதால் பணம் கிடைப்பதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக குறித்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் வாகனங்களுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் தொடர்ந்தும்  எரிபொருள் நிலையங்களுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.