சாய்ந்தமருது மல்ஹருஸம்ஸ் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

சாய்ந்தமருது மல்ஹருஸம்ஸ் பாடசாலையின் வித்தியாரம்ப விழா



சாய்ந்தமருது கமு/கமு/மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில்  தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா நேற்று செவ்வாய்கிழமை (25) பாடசாலை வளாகத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற தரம் ஒன்று மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். 

பாடசாலையின் அதிபர் எம்.சீ. நஸ்லின் றிப்கா அன்சார்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, 
உதவிக் கல்விப் பணிப்பாளரும் சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலீக்,  கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின்  அதிபர் எம்.ஐ. ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர்  மற்றும் EPSI ஒருங்கிணைப்பாளர் ஏ.றாசிக்,  பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஐ.தன்ஸில் மற்றும்  பழைய மாணவர்களின் பிரதித் தலைவர் நெளஷாட், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள்  பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், தேசிய கீதம், பாடசாலை கீதம் இடம்பெற்றதுடன்  அதிபர் உரை, மாணவர்கள் கலை நிகழ்வுகளும்  அதிதிகளால் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அறிவுரைகளும் சொல்லப்பட்டன. 

தரம் ஒன்று  மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கியதோடு, இனிப்புகளும் வழங்கப்பட்டு,  மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு நன்றி செலுத்தப்பட்டதுடன் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் அதிபர் திருமதி றிப்கா அன்சார் நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துகள்