இனிப்பு உணவு வகைகள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் தொற்றாத நோய்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் கலாநிதி ரவீந்திர விதானாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் நவீன உணவு முறையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் முன்னைய காலங்களில் புத்தாண்டு இனிப்புகளை தயாரிப்பது போன்று தற்போதும் இனிப்புகளை தயாரித்து உண்ணுவார்களாயின் அது ஆரோக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.