காணாமல் போயிருந்த குழந்தை வீட்டின் அருகில் உள்ள  ஓடையில் இருந்து சடலமாக கண்டெடுப்பு

காலி - நெலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த, பாமன்கட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயிருந்த இரண்டரை வயது குழந்தையின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குழந்தை இருந்த வீட்டுக்கு அருகில் ஓடும் கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மதியம் முதல், காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டிருந்தனர்.இந்த நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த  இராணுவத்தினர் வீட்டின் அருகில் உள்ள  ஓடையில் இருந்து குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.