இலங்கையில் வர்த்தக வங்கிகளில் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 316.41 ரூபாவில் இருந்து 313.52 ரூபாவாக குறைந்துள்ளது.

விற்பனை விலையானது 339.19 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக குறைந்துள்ளது.

 சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலையானது 315 ரூபாவில் இருந்து 313 ரூபாவாக குறைந்துள்ளது.

 அத்துடன் விற்பனை விலை 330 ரூபாவில் இருந்து 328 ரூபாவாக குறைந்துள்ளது.

இருப்பினும், கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 311.76 ரூபா மற்றும் 330 ரூபாவாக மாறாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.