பாடசாலை மாணவர்களுக்கு நற் செய்தி!

பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​காலணிகள் மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கான மூலப்பொருட்கள் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூரிலையே இப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்போது தோழரின் பெறுமதி வீழ்ச்சியை கொண்டுள்ளதால் இதன் விலைகள் இன்னும் சந்தையில் குறைக்கப்படாமல் உள்ளது.

இந்த விவகாரத்தை ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கொள்கைத் துறைக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.விலை குறையவில்லை என்றால் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்து விலையை குறைப்பதற்கு தகுந்த தீர்வை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.